நஸ்ரியாவின் டான்ஸுக்கு குவியும் லைக்குகள்

நஸ்ரியாவின் டான்ஸுக்கு குவியும் லைக்குகள்

தமிழில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்த நஸ்ரியாவின் புதிய நடனம் காணொளி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென மின்ஊடுருவாளர்களால் முடக்கப்பட்டது. இந்த செய்தியை நஸ்ரியாவே உறுதி செய்தார். பின்னர் அதை மீட்டெடுத்தார்.

இந்நிலையில் தற்போது நஸ்ரியா தனது தோழியுடன் இணைந்து நடனமாடும் காணொளியை பகிர்ந்துள்ளார். நஸ்ரியாவின் இந்த நடனம் காணொளி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வருகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan