அண்ணாத்த படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்

அண்ணாத்த படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.

இதையடுத்து ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி சென்னையிலேயே மீதிப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது. 

இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan