ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய கீர்த்தி சுரேஷ்

ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

தென்னிந்திய திரைப்படத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க இளம் சாதனையாளர்களில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம், பவன் கல்யாண், சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகன்க்களுக்கு ஜோடியாக நடித்தவர் ’நடிகையர் திலகம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார். 

கீர்த்தி ஒரு பன்முக திறமை வாய்ந்தவர். முன்னதாக ஓவியங்கள் மூலம் தனது திறன்களை வெளிப்படுத்தினார். விஜய் பிறந்தநாளன்று வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்தார். இப்போது புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவில் ‘ரங் தே’ படத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இசைக்கு ஏற்ப கீர்த்தி பாடுகிறார். கீர்த்தியின் இனிமையான குரலைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். மேலும் இந்த காணொளி அதிக லைக்குகளைப் பெற்று வருகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan