இசையமைப்பாளருக்கு ஜோடியான சாக்ஷி அகர்வால்

இசையமைப்பாளருக்கு ஜோடியான சாக்ஷி அகர்வால்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், இசையமைப்பாளர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தில் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் நடிப்புத்துறையிலும் அவர்கள் வெற்றி பெறுவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி வரிசையில் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார் இன்னொரு இசையமைப்பாளரான பாலாஜி என்கிற விது.

இவர் தமிழில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி (கன்னடா) உட்பட மேலும் இரண்டு புதிய கன்னடா மற்றும் தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் கன்னட மறுதயாரிப்புகில் இவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தற்போது கதையின் நாயகனாக புதிய

தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் நாயகியாக ‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan