நிர்வாண புகைப்படம் வெளியிட்ட நடிகையின் சமூக வலைத்தள கணக்கு முடக்கம்

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட நடிகையின் சமூக வலைத்தள கணக்கு முடக்கம்

ஆபாசத்துக்கும், நிர்வாணத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் சமூக வலைத்தள நிறுவனங்கள் செயல்படுவதாக நடிகை நிகிதா கோகலே விமர்சித்துள்ளார்.

பிரபல மராத்தி நடிகை நிகிதா கோகலே. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக நிர்வாண பாவனை கொடுத்து எடுத்த தனது புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். இதற்காக அவரது கணக்கை ஏராளமானோர் பின் தொடர்ந்தனர். இந்த நிலையில் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த காரணத்தினால் நிகிதா கோகலேவின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது. இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆபாசத்துக்கும், நிர்வாணத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் சமூக வலைத்தள நிறுவனங்கள் செயல்படுகின்றன. கோவில்களில் இருக்கும் சிற்பங்கள் போன்றதுதான் நிர்வாண கலை. சமூக வலைத்தளங்களில் கண்ட உணவை சாப்பிடும் புகைப்படங்களையும், பைத்தியக்காரத்தனமான புகைப்படங்களையும் அனுமதிக்கும் சமூக வலைத்தளங்கள் கலை நயமிக்க புகைப்படங்களை வெளியிட அனுமதி மறுப்பது வியப்பாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan