ரசிகர்களுடன் நட்பாக பழகுவது… விஜய் எனக்கு கற்றுத்தந்த பாடம் – பிரியங்கா சோப்ரா புகழாரம்

ரசிகர்களுடன் நட்பாக பழகுவது… விஜய் எனக்கு கற்றுத்தந்த பாடம் – பிரியங்கா சோப்ரா புகழாரம்

நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யுடன் தான் நடித்த முதல் படம் குறித்த அனுபவங்களை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அன்பினிஷ்டு (Unfinished)  என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் அதில் தனது திரையுலக அனுபவங்களை  பகிர்ந்து உள்ளார். அந்த புத்தகத்தில் தனது முதல் தமிழ் படமான தமிழன் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தது குறித்தும், அவரிடம் கற்றுக்கொண்டது குறித்தும் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: 2000-ம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற சில நாட்களிலேயே நான் திரையுலகில் நுழைந்தேன். முதலில் தமிழன் என்ற தமிழ் படத்தில் நடித்தேன். என் முதல் கதாநாயகன் தளபதி விஜய். நடிகர் விஜய்யின் பணிவு மற்றும் ரசிகர்களுடன் அவர் நட்பாக பழகும் விதம், எனக்குள் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, எனது வெப் தொடரான குவாண்டிகோவின் படப்பிடிப்பிற்காக நியூயார்க் நகரில் இருந்தேன். படப்பிடிப்பு நடத்தி வருவதை ரசிகர்கள் அறிந்து, என்னுடன் புகைப்படம் எடுக்க திரண்டனர். நான் மதிய உணவு இடைவேளையின் போது ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அது எனது முதல்பட நடிகர் விஜய் எனக்கு கற்றுத்தந்த பாடம் என கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan