பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் ஶ்ரீ ரெட்டி

பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் ஶ்ரீ ரெட்டி

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஶ்ரீ ரெட்டி, பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருக்கிறார்.

தெலுங்கு திரைப்படத்தில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தெலுங்கு திரைப்படம் தவிர தமிழ் திரைப்படத்தில்ும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பரபரப்பு புகார் கூறினார்.

தற்பொழுது நடிகை ஸ்ரீரெட்டி மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாக்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan