திரெளபதி இயக்குனரின் படத்தில் நடிக்கும் கெளதம் மேனன்

திரெளபதி இயக்குனரின் படத்தில் நடிக்கும் கெளதம் மேனன்

திரெளபதி பட இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படத்தில், இயக்குனர் கெளதம் மேனன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.

இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் கெளதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் மோகன் ஜி, கெளதம் வாசுதேவ் மேனன், ருத்ரதாண்டவம் படத்தில் வாதாபிராஜனாக நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan