‘சூர்யா 40’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது – சூர்யா பங்கேற்கவில்லை

‘சூர்யா 40’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது – சூர்யா பங்கேற்கவில்லை

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகர் சூர்யா பங்கேற்கவில்லை.

சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. கொரோனா சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் நடிகர் சூர்யா இதில் கலந்துகொள்ள வில்லை. 

இருப்பினும் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் சத்யராஜ், இளவரசு, சுப்பு பஞ்சு அருணாசலம், தங்கதுரை ஆகியோரும், நடிகைகள் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, திவ்யா துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். கடைசியாக சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் பணியாற்றிய ரத்னவேலு, தற்போது 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan