வலிமை படத்தின் புதிய அப்டேட் கொடுத்த போனி கபூர்…. உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

வலிமை படத்தின் புதிய அப்டேட் கொடுத்த போனி கபூர்…. உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.

சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது “வலிமை படத்தின் ஒரு சண்டை காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. அதை தவிர்த்து முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15க்குள் முடிவடையும். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தின் வெளியீடு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என கூறியிருந்தார்.

இந்நிலையில், வலிமை படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி தயாராகிக் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். மேலும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் விரைவில் வலிமை முதல் பார்வைகை வெளியிடுவோம் எனவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan