கணவருடன் பொள்ளாச்சி கடையில் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்

கணவருடன் பொள்ளாச்சி கடையில் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்

பொள்ளாச்சியில் உள்ள சாதாரண ஹோட்டலுக்கு கணவருடன் வருகை தந்த நடிகை காஜல் அகர்வால்.

இந்திய திரைப்படத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் காஜல் அகர்வால் மற்றும் அவருடைய கணவர் கவுதம் கிச்சலுவுடன் பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் எனும் ஒரு சிறிய உணவகத்துக்கு வருகைத்தந்திருந்தார்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், சாந்தி உணவகம் எனக்கு மிகவும் பிடித்த உணவகம். சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா எனக்கு மிகவும் பாசத்தோடு உணவை பரிமாறுவார்கள். கடந்த 27 வருடங்களாக சுவை மாறாமல் அதே அருமையான சுவையுடன் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்கள். நான் இந்த உணவகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளாக வந்து செல்கிறேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan