அந்த காட்சியில் அழுதுவிட்டேன் – அதிதி பாலன்

அந்த காட்சியில் அழுதுவிட்டேன் – அதிதி பாலன்

அருவி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அதிதிபாலன், அந்த காட்சிகளில் நடிக்கும் போது அழுதுவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அருவி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அதிதி பாலன், விஜய் சேதுபதியுடன் குட்டி ஸ்டோரி படத்தில் நடித்திருந்தார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அருவி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு இந்த படத்தில் நடித்துள்ளேன். காரணம் நல்ல கதைக்காக காத்திருந்தேன். அதேநேரம் எனக்கு வந்த கதைகள் சில பிடிக்கவில்லை. தொடர்ந்து வந்த கதைகளும் பெண்களை மையப்படுத்தியே வந்தது. 

அருவி போன்று இல்லாமல் வித்தியாசமான கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆசையாக இருந்தேன். இந்நிலையில்தான் நலன் குமாரசாமி சொன்ன கதை பிடித்திருந்தது. இந்த கூட்டணியில் விஜய் சேதுபதியும் இணைந்ததால் உடனே சரிதான் சொல்லிவிட்டேன். எனக்கு விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி என்னிடம் இயல்பாக பழகியதோடு, நிறைய அவரிடம் கற்றுக்கொண்டேன். காதல் காட்சிகளில் இதுவரை நான் நடித்ததில்லை. 

முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கும்போது கொஞ்சம் சிரமமாக இருந்தது. அப்போது நான் அழுதுவிட்டேன். விஜய் சேதுபதி அனுபவம் மிக்கவர் என்பதால் அவரால் இயல்பாக நடித்துவிட முடிகிறது’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan