காதலில் விழுந்த சனம் ஷெட்டி… குவியும் வாழ்த்துகள்

காதலில் விழுந்த சனம் ஷெட்டி… குவியும் வாழ்த்துகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் திரைப்படத்தில் ஒரு சில படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4-வது பருவத்தில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் நெற்றியில் குங்குமம் வைத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனம் ஷெட்டி பதிவேற்றினார். இதனால் அவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்த சனம் ஷெட்டி தனது வீட்டில் திருமணமான பெண்களுக்குத் தான் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்றும் விளக்கமளித்தார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருவரது கையைப் பிடித்தபடி நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருக்கிறீர்கள் மோன். காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி.” என்று புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அந்த அதிர்ஷ்டசாலி யார், மோன் என்பது யார் என்று கூறுங்கள் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் ஒரு சிலர் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan