40 வயதில் 2-வது திருமணம் செய்துகொண்ட கவுதம் மேனன் பட நடிகை

40 வயதில் 2-வது திருமணம் செய்துகொண்ட கவுதம் மேனன் பட நடிகை

கவுதம் மேனன் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஒருவர், 40 வயதில் இரண்டாவது திருமணம் செய்து உள்ளார்.

கவுதம் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது. அதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் தியா மிர்சா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு சாஹில் சங்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில், 40 வயதாகும் நடிகை தியா 2-வது திருமணம் செய்துள்ளார். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் வைபவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் நடந்தது. சமூக வலைதளத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ள தியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan