கர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு

கர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் வெளியீடு தேதியுடன் கூடிய, முதல் பார்வை விளம்பர ஒட்டியை படக்குழு வெளியிட்டது. மேலும் வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இப்படம் திரையரங்கம்களில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது கண்டா வரச்சொல்லுங்க என்ற முதல் பாடலை நாளை இரவு 8 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan