ராயர் பரம்பரையில் கழுகு கிருஷ்ணா

ராயர் பரம்பரையில் கழுகு கிருஷ்ணா

கழுகு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கிருஷ்ணா தற்போது ராயர் பரம்பரை படத்தில் நடித்துள்ளார்.

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மெளனகுரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ராயர் பரம்பரை”. கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான மரடோனா, டூ ஸ்டேட்ஸ் படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும், தெலுங்கு பட நாயகி மும்பை அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். மேலும், கே.ஆர்.விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா ஆர்.என்.ஆர்.மனோகர், கஸ்தூரி, பவர் விண்மீன், கலக்கப்போவது யாரு தங்கதுரை, மிப்பு, கல்லூரி வினோத், சரண்யா, லொல்லு சபா சேஷு, ஷாலு ஷம்மு மற்றும் பலர் நடிக்க செண்டிமென்ட் கலந்த மிகப்பெரிய நகைச்சுவை படமாக பொள்ளாச்சியில் தயாராகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் சூட்டிங் ஒரே கட்டமாக பிளான் செய்யப்பட்டு டிசம்பர் தொடங்கி பொங்கலுக்கு முன் முடிக்கப்பட்டது. மிரட்டலான சண்டைக் காட்சிகளுடனும், பல லட்சம் ரூபாயில் மிகப்பெரிய செட் அமைத்து சாண்டி மக்கள் விரும்பத்தக்கதுடரின் வித்தியாசமான நடனத்துடனும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ராயர் பரம்பரை.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan