அதுதான் என் உண்மையான காதலன் – கங்கனா ரனாவத்

அதுதான் என் உண்மையான காதலன் – கங்கனா ரனாவத்

போர்க்களம்தான் என் உண்மையான காதலன் என்று பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜ்னீஷ் கை இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வரும் படம் ‘தாக்கட்’. இப்படம் குறித்து கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”சண்டையில் ஆறுதல் தேடுவது என்பது உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம். வாள்களின் சத்தங்களுக்கு இடையே காதலில் விழுவது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைக்கலாம். 

உங்களைப் பொறுத்தவரை போர்க்களம் என்பது ஒரு மோசமான உண்மை. ஆனால், யுத்தம் செய்யப் பிறந்த ஒருவருக்கு இவ்வுலகில் வேறு இடம் கிடையாது. இது துடிப்பான ரத்தம் கொண்ட ஒரு பெண்மணியின் வாக்குமூலம். என்னுடைய போர்க்களம்தான் என்னுடைய ஒரே உண்மையான காதலன். அந்த ஒரே இடம் மட்டும்தான் நான் வேறு இடமாக உணராத ஒரே இடம்”. இவ்வாறு கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan