அஞ்சலியிடம் லிப்ட் கேட்கும் ரசிகர்கள்

அஞ்சலியிடம் லிப்ட் கேட்கும் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான அஞ்சலியிடம் ரசிகர்கள் பலரும் லிப்ட் கேட்டு வருகிறார்கள்.

2007ம் ஆண்டு வெளியான “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கியிருந்த இந்த படம் அஞ்சலிக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. அந்த வெற்றியை அடுத்து கடந்த 2010ல் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த “அங்காடி தெரு” படத்தில் நடித்த அஞ்சலி தனக்கான தனி இடத்தை உருவாக்கிக்கொண்டார். தொடர்ந்து எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி உள்ளிட்ட பல படங்களில் வித்யாசமான கதாபாத்திரம் ஏற்று முன்னணி நடிகையானார். 

கடந்த வருடன் இவருடைய நடிப்பில் பாவக்கதைகள், நிசப்தம், நாடோடிகள் 2 படங்கள் வெளியானது. தற்போது தமிழ், தெலுங்கு மொழிபடங்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி வீட்டு வாசலில் யமாஹாஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) ஓட்டும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், எங்களுக்கு லிப்ட் கிடைக்குமா? என ஏக்கத்துடன் கேட்டு கமண்ட் அடித்து வருகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan