26 வருடங்கள் ஆகிவிட்டது… குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு

26 வருடங்கள் ஆகிவிட்டது… குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு

பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் 26 ஆகிவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பு. வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருந்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் குஷ்பு. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று சுந்தர் சி குஷ்புக்கு காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், சுந்தர் சி காதலைத் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவு சிறப்பாக அமையும். அதையேதான் நானும் செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan