ராதிகா வேடத்தில் நடிக்க 2 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை

ராதிகா வேடத்தில் நடிக்க 2 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை

சித்தி 2 தொடரிலிருந்து ராதிகா விலகியதை தொடர்ந்து அவரது வேடத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிரபல நடிகையான ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அந்த தொடருக்கே அடையாளமாக இருந்த ராதிகா இல்லாமல் தொடரை எப்படி தொடர்வது என்ற யோசனையில் படக்குழு யோசனையில் இருக்கிறார்கள்.

ராதிகா இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வாரம் ஒளிபரப்பி அதற்கான வரவேற்பைப் பொறுத்து அதன் பின்னர் தொடரலாமா இல்லை சீரியலை நிறுத்தி விடலாமா என்ற யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இப்போது ராதிகா வேடத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா ஆகியோரிடம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. இருவரும் இன்னமும் திரைப்படத்தில் வேலையாக நடித்து வரும் நிலையில் மிகப்பெரிய அளவில் சம்பளம் கொடுத்தாவது இருவரில் ஒருவரை நடிக்க சம்மதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan