பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்த பார்வதி நாயர்

பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்த பார்வதி நாயர்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர், தற்போது பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடித்து வருகிறார்.

அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன்பிறகு உன்னைபோல் ஒருவன், கோ, இவன் வேறமாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனாலும் கதாநாயகனாக நடித்த படங்கள் மிகவும் குறைவு.

தற்போது உன் பார்வையில் என்ற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன். இதனை பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் நடிக்கிறார்கள். காதல் லீலை திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் தொழில் அதிபராகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan