பிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி… பாராட்டும் ரசிகர்கள்

பிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி… பாராட்டும் ரசிகர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு பிரபலமான ஜூலியின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்தப் போட்டியில் நடைபெற்ற சில சர்ச்சைகளினால் இவருக்கு ஆதரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பின.

பின்னர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக மாறினார். அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி திரைத்துறையிலும் இவர் கால் பதித்தார். இவரது நடிப்பில் தற்போது “பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ என்ற படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஜூலி விதவிதமான போட்டோக்களை பதிவு செய்தும் வருவார். இந்நிலையில், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும்,‘நினைத்து நினைத்து பார்த்தால்’ பாடலை பாடி காணொளி வெளியிட்டு ஒரு முயற்சி என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிர்கள் பலர் சிறப்பாக இருக்கு என்று பாராட்டி வருகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

Author Image
murugan