Press "Enter" to skip to content

யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பாடம், துருவங்கள் பதினாறு, மூக்குத்தி அம்மன் படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். 

தற்போது வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘கடமையை செய்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் யாஷிகா, சமூக வலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை நிற மார்டன் உடையில் கவர்ச்சியாக பாவனை கொடுத்தபடி அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு லைக்சும் குவிந்து வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar