Press "Enter" to skip to content

மங்காத்தா அஜித் போன்று ‘சால்ட் அன்ட் பெப்பர்’ பார்வைகில் நடிக்கும் விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

அதன்படி 2013-ம் ஆண்டு வெளியான விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி கே குமார், இப்படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, மங்காத்தா அஜித் போன்று சால்ட் அன்ட் பெப்பர் பார்வைகில் நடிக்க உள்ளாராம். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar