Press "Enter" to skip to content

கவர்ச்சி உடையில் சமந்தா… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படங்கள்

பச்சை நிற கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை நடிகை சமந்தா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா, புகைப்படங்கள் மற்றும் காணொளிக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும், அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் பச்சை நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக பாவனை கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகைகளையும் கவர்ந்துள்ளது. அதன்படி நடிகைகள் ஹன்சிகா, ராஷி கண்ணா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் சமந்தா மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar