Press "Enter" to skip to content

மெலிந்த தோற்றத்துக்கு மாறிய நடிகை இந்துஜா – மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படங்கள்

உடல் எடையை குறைத்தபின் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை இந்துஜா, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இந்துஜா. இதையடுத்து மெர்குரி, 60 வயது மாநிறம், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது காக்கி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்துஜா. இப்படத்தில் அவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை இந்துஜா, உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார். லாக்டவுன் சமயத்தில் தீவிர உடற்பயிற்சி செய்து அவர் உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. உடல் எடையை குறைத்தபின் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகுதியாக பகிரப்பட்டுி வருகின்றன.    

Related Tags :

[embedded content]

Source: Malai Malar