Press "Enter" to skip to content

விஷாலின் ‘எனிமி’ தள்ளிப்போகிறது – வெளியீடு தேதி திடீரென மாற்றம்

நடிகர்கள் ஆர்யாவும், விஷாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடித்துள்ள எனிமி படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார்.

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் எனிமி. இப்படத்தில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா பகைவனாகவும் நடித்துள்ளார். இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எனிமி படத்தின் விளம்பர ஒட்டி

இப்படம் அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென வெளியீடு தேதியை மாற்றி உள்ளனர். அதன்படி ‘எனிமி’ திரைப்படம் அடுத்தமாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’, அருண் விஜய்யின் ‘வா டீல்’ ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »