Press "Enter" to skip to content

வில்லங்கமான கேள்வி.. கூலாக பதிலளித்த நஸ்ரியா

‘அன்டே சுந்தரனிகி’ என்ற தெலுங்கு படத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட நஸ்ரியாவிடம் கேட்கப்பட்ட வில்லங்கமான கேள்விக்கு சூப்பர் பதில் அளித்தார்.

நேரம்’ படத்தின் மூலமாக தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா. ‘ராஜா ராணி’, ‘நையாண்டி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஆகிய படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது ‘துறுதுறு’ நடிப்புக்கும், கொஞ்சல் சிரிப்புக்கும் ரசிகர்கள் ஏராளம். முன்னணி நடிகையாக இருந்தபோதே நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

நஸ்ரியா

சிறிய இடைவெளிக்கு பிறகு நஸ்ரியா மீண்டும் திரைப்படத்திற்கு திரும்பியுள்ளார். தெலுங்கில் நானி ஜோடியாக ‘அன்டே சுந்தரனிகி’ என்ற படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். லீலா தாமஸ் என்ற கிறிஸ்தவ பெண்ணாக அவர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட நஸ்ரியாவிடம், ‘இஸ்லாமிய பெண்ணாக இருந்துகொண்டு, படத்தில் கிறிஸ்தவ பெண் கதாபாத்திரத்தில், இந்து ஆணுக்கு மனைவியாக நடித்து இருக்கிறீர்கள். எப்படி இது சாத்தியம்’, என்று வில்லங்கமான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நஸ்ரியா, ‘‘எனக்கு கதை பிடித்து இருந்தது. அதனால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன். கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு நடித்தேன், அவ்வளவுதான்’’, என்று விளக்கம் கொடுத்தார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar