தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடையை திறந்து வைக்க சென்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.
தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுடன் நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரனை தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டையில் ஒரு கடையை திறந்து வைக்க அழைத்து இருந்தனர்.
அனுபமா பரமேஸ்வரன்
அங்கு அவரை காண நிறைய ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். காரில் வந்து இறங்கிய அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்று கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்து காருக்கு அவர் திரும்பியபோது ரசிகர்கள் சூழ்ந்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் அனுபமா பரமேஸ்வரன் சிக்கினார். அனுபமாவுடன் ரசிகர்கள் முண்டியடித்து சிலர் கைகுலுக்கி செல்பி எடுத்தனர்.

அனுபமா பரமேஸ்வரன்
அவரை காரில் ஏற விடாமல் தடுத்து ரகளை செய்தனர். செல்பி எடுக்க முடியாத சிலர் கோபத்தில் அனுபமா காரின் டயரில் காற்றை பிடுங்கி விட்டனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய அனுபமா தவித்தார். உடனே கடை ஊழியர்களும், போலீசாரும் ரசிகர்களை விரட்டி அனுபமாவை மீட்டு வேறு ஒரு காரில் ஏற்றி ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
[embedded content]
Source: Malai Malar