Press "Enter" to skip to content

கே.ஜி.எப்.-2 படத்தை பார்த்து ரசித்த கமல்ஹாசன்-இளையராஜா

நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் இளையராஜாவும் கேஜிஎப்-2′ படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்தனர்.

கமல், இளையராஜா இருவரிடமும் நல்ல நட்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது. கதைகளை ஒன்றாக விவாதிப்பது முதல் இசையில் கமலுக்கு இருக்கும் நுட்பத்தை இளையராஜா பாராட்டுவது வரை என்று அவ்வபோது இந்த அன்பின் வெளிப்பாடு தெரிந்து கொண்டே இருக்கும். இளையராஜா தன் பல மேடைகளில் கமலை பாட வைத்து அழகு பார்ப்பார்.

இளையராஜா – கமல்ஹாசன்

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கே.ஜி.எப்.-2 படத்தை இளையராஜா-கமல்ஹாசன் இருவரும் படத்தை சேர்ந்து பார்த்து ரசித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் படத்தை சேர்ந்து பார்த்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. இந்த படத்தை பார்த்து இருவரும் படக்குழுவினர்களை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar