இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் ஏகே-62 படத்திற்காக அதிரடி முடிவெடுத்துள்ளார்.
விக்னேஷ் சிவன், நடிகர் அஜித்தை வைத்து இயக்க இருக்கும் படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் அஜித்துக்கு பகைவனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்று இணையத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அந்த செய்தியை இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுத்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி – அஜித்
அஜித்தின் ‘ஏகே-62’ படத்தில் விஜய் சேதுபதியை பகைவனாக நடிக்க வைக்கப்போகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் விஜய் சேதுபதியை எப்போதும் என் படங்களில் கதாநாயகனாக மட்டும் தான் நடிக்க வைப்பேன், ஒருபோதும் அவரை எனது படங்களில் பகைவனாக நடிக்க வைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
[embedded content]
Source: Malai Malar