Press "Enter" to skip to content

இணையத்தில் கசிந்த ‘அவதார்-2’ பட விளம்பரம்.. அதிர்ச்சியில் படக்குழு

ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ‘அவதார் 2’ படத்தின் பட விளம்பரம் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், அவதார் 2 வெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அவதார்-2

அவதார் படத்தின் விளம்பரத்தை வருகிற 6-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட இருந்தனர். இந்நிலையில், பட விளம்பரம் முன்கூட்டியே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar