Press "Enter" to skip to content

வெந்து தணிந்தது காடு.. புதிய அப்டேட் கொடுத்த சிம்பு

பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை சிம்பு வெளியிட்டுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் விளம்பரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெந்து தணிந்தது காடு

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்றுள்ள முதல் லிரிக்கல் காணொளி ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் தாமரை எழுதியுள்ள இந்தப் பாடலை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar