Press "Enter" to skip to content

சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாய்பல்லவி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச் சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

சாய்பல்லவி

தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷியாம் சிங்காராய் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. அவரது கடைசி படமாக  ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. 

சாய்பல்லவி

சாய்பல்லவி

சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படங்களிலும் சாய் பல்லவி நடிக்க சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாய் பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்பதுதான் அந்த சந்தேகம். இது பற்றி இணையத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar