Press "Enter" to skip to content

தனுஷ் பட நாயகியுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் கதாநாயகியாக தனுஷ் பட நாயகி இணைந்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அயலான் படத்தின் இறுதிகட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ஒன்றிலும், அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் ‘சிவகார்த்திகேயன் 21’ என்ற படத்திலும் நடிக்கிறார். 

சிவகார்த்திகேயன் 21

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் நடிக்கும் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி பிரேமம், தியா, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்த சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar