Press "Enter" to skip to content

12 மணி நேரம் உயிரோட இருக்கலாம்.. மிகுதியாகப் பகிரப்படும் நயன்தாரா பட விளம்பரம்

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடித்துள்ள அடுத்த படத்தின் விளம்பரம் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தொடர்ந்து, நயன்தாரா நடித்து முடித்திருக்கும் அடுத்த படம் ‘ஓ-2’  என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஜி.கே.விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

நயன்தாரா – ஓ2

விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “ஓ-2”. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” இந்த படத்தில் அம்மா பார்வதியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar