Press "Enter" to skip to content

மகன் படத்தை வாழ்த்திய தந்தை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார்.

நெஞ்சுக்கு நீதி  படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  ‘நெஞ்சுக்கு நீதி’  திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

மே மாதம் 20-ந்தேதி அன்று வெளியாக உள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »