பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைபிரபலம் கலந்துக் கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரபலம். இந்த ஆண்டு பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. ஒவ்வொரு வருடமும், இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும், தங்களின் படம் அதில் திரையிடப்படுவதும் சர்வதேச திரைக் கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள திரைக் கலைஞர்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கேன்ஸ் திரைப்பட விழா
இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றனர்.

கமல் – ஏ.ஆர்.ரஹ்மான்
நேற்று நடந்த தொடக்க விழாவில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் கமல், மாதவன், நவாசுதின் சித்திக், அக்ஷய் குமார் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
[embedded content]
Source: Malai Malar