Press "Enter" to skip to content

ரஷியாவில் லோகேஷ் கனகராஜ் திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கைதி திரைப்படம் ரஷிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளது.

2019-ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பரபரப்பு சண்டை காட்சிகள் மற்றும் அப்பா – மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘கைதி’. இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். 

கைதி

இந்நிலையில் ‘கைதி’ திரைப்படம் ரஷிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் ரஷ்யாவில் 121 நகரங்களில் சுமார் 297 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar