Press "Enter" to skip to content

“என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை” – சிவகார்த்திகேயன் படத்தை பாராட்டிய ரஜினி

‘டான்’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் அழைத்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. 

ரஜினிகாந்த்

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘டான்’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், “சூப்பர், சூப்பர், பிரமாதம். நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது. கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar