Press "Enter" to skip to content

ஐபிஎல் நடுவே விளம்பரத்தை வெளியிடும் ஆர்.ஜே.பாலாஜி

இன்றைய ஐபிஎல் போட்டியின் போது ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘வீட்ல விசேஷம்’ படத்தின் விளம்பரத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பதாய் ஹோ. இப்படம் தமிழில் மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முக திறமை கொண்ட ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

வீட்ல விசேஷம்

இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், ‘வீட்ல விசேஷம்’ படத்தின் பட விளம்பரம் வெளியீடு இன்று நடைபெறும் லக்னோ – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான பிளே ஆப் போட்டியின் இடையில் வெளியிடப்படும் என ஆர்.ஜே.பாலாஜி அறிவித்துள்ளார். இதற்கு முன் அவர் நடித்து வெற்றி பெற்றிருந்த எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களின் டிரைலரும் அவ்வாறே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar