Press "Enter" to skip to content

75வது இராணுவ தின விழா…அசத்திய மோப்ப நாய்கள்…மிகுதியாகப் பகிரப்படும் காணொளி!

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ தின விழாவில் வீரர்களுடன் இணைந்து மோப்ப நாய்களும் பங்கேற்று அசத்திய காணொளி இணையத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

75வது ராணுவ தின விழா :

நாட்டின் 75வது ராணுவ தின விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்திய ராணுவத்தின் தளபதியாக கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்ட நாளை நினைவுகூறும் விதமாக ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

முன்னதாக, ஒவ்வொரு ஆண்டும் டெல்லி கரியப்பா மைதனாத்தில் ராணுவ தின விழா நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.

இதையும் படிக்க : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு குட் நீயூஸ்…தமிழக அரசின் திடீர் அறிவிப்பு…!

இந்த இராணுவ தின கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை ஏந்தியவாறு டிரோன் மற்றும் பாரஷூட்கள் பறந்தன. எல்லை பாதுகாப்பில் டிரோன்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை குறிக்கும் விதமாக டிரோன்கள் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரில் செய்து அசத்திய மோப்ப நாய்கள் :

அதேபோன்று, ஜம்மு – காஷ்மீர் உதம்பூரில் 75வது ராணுவ தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் இராணுவ வீரர்களுடன் சேர்ந்து மோப்ப நாய்களும் பங்கேற்றன. அப்போது, ராணுவ வீரர்கள் டிரில் செய்தததை போல மோப்ப நாய்களும் செய்து அசத்தியது. இது குறித்த காணொளி தற்போது இணையத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »