Press "Enter" to skip to content

மக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் – நெல்லையில் புதிய மாவட்ட ஆட்சியர்…

தென்காசி | இலஞ்சி கொட்டாகுளம் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட வினீத் – கிருத்திகா தம்பதியினரை பிரித்து கிருத்திகாவை அவரது பெற்றோர்கள் கடத்திச் செல்வது போன்ற கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகள் மிகுதியாக பகிரப்பட்டு ஆனதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருத்திகாவை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் அறங்கேறி வரும் சூழலில், கிருத்திகாவை மீட்பதற்காக தனிப்படை காவல் துறையினர் தற்போது குஜராத் விரைந்து அங்கு கிருத்திகாவை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | “நூதன முறையில் கொள்ளை அடிக்கிறது இந்து அறநிலைத்துறை” – முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல்…

இந்த சூழலில், குஜராத் பகுதியில் உள்ள ஒரு கோவில் வைத்து கிருத்திகாவுக்கும், அவரது உறவினரான மேத்ரிக் பட்டேல் என்ற நபருக்கும் திருமணம் நடைபெற்றது போன்ற காணொளி ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கிருத்திகா பேசுவது போன்ற ஒரு காணொளி வெளியிடப்பட்டது. ‘அதில் தன் விருப்பப்படியே தனது பெற்றோர் உடன் இருப்பதாக கிருத்திகா தெரிவித்த சூழலில், நேற்று கிருத்திகாவும், வினித்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது போன்ற ஒரு ஒலிநாடா வெளியானது.

இப்படி, நாளுக்கு நாள் இந்த வழக்கில் பல்வேறு பரப்பரப்புகள் அரங்கேறி வரும் சூழலில், தற்போது மீண்டும் கிருத்திகா ஒரு காணொளியை பதிவிட்டு அவரது வழக்கறிஞர்கள் மூலமாக வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க |

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
com/posts/district-news/5-people-arrested-for-hunting-deer-in-the-forest” target=”_blank” rel=”noopener”>வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய 5 பேர் கைது…

அந்த காணொளியில், வினீத்தின் குடும்பத்தார் என்னை வைத்து எனது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல் விட்டதாகவும், இதை தெரிந்து கொண்ட தான் தனது கணவரான மேத்ரிக் பட்டேல் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்து தன்னை அழைத்துச் செல்லும்படி கோரிக்கை வைத்ததாகவும், அதனால்தான் தனது பெற்றோர்கள் தன்னை அழைத்து சென்றதாகவும் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி தற்போது வெளியாகி உள்ள சூழலில், பணத்திற்காக வினீத் குடும்பத்தினர் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கிருத்திகா காணொளி வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆட்கடத்தல் வழக்கில் அரசு மருத்துவர் கைது…

Source: Malai Malar