Press "Enter" to skip to content

பேசுப்பொருளாகவே இருக்கும் பாலின சமத்துவம்…. விளையாட்டுத்துறையிலிருந்து மாற்றுவோம்!!!

காதலர் தினத்திற்கு நமது காதலரை புதிதாக எப்படியெல்லாம் குஷி படுத்துவது என பல வகையான குழப்பங்கள் நம்மிடம் இருக்கும். ரோஜா போல பூக்கள் கொடுக்கலாமா? அல்லது எதாவது புதிதாக பரிசு கொடுக்கலாமா? என தலையை பிடித்து உலுக்கிக் கொள்ளும் அளவிற்கு குழம்பி போய் இருக்கும் உங்களுக்கு, ஒரு சிறிய ஐடியா… ஒரு அழகான காதல் பாடலை அவர்களுக்கு அர்ப்பணித்து, அதில் அவர்களது போட்டோவை வைத்து எடிட் செய்து பரிசாக அளிக்கலாம் அல்லவா? ஆனால், எந்த் அபாடல்கள் ட்ரெண்டிலும் இருக்கிறது, காதலையும் வெளிப்படுத்துகிறது என்ற கேள்வி வருமல்லவா? அதற்கான பதில் தான் இது!!!

சுமார் 100 ஆண்டுகால தமிழ் திரைப்படத்தில் பல லட்சம் காதல் பாடல்கள் வந்துள்ளது. அதில் சிறந்த 10 சொல்வதை விட, 2022-2023 வந்த பாடல்களில் சிறந்த 10 பாடல்களை தேர்ந்தெடுத்துக் கொடுப்பது எளிதல்லவா? அந்த பாடல்கள் என்னவென்று பார்க்கலாம்!!!

10. வா வாத்தி:

நடிகர் தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கிய படமான வாத்தியின் டைட்டிள் பாடல் இது. டைட்டிள் பாடலாக இருந்தாலும், காதலைக் கொட்டித் தீர்த்திருப்பார் நமது பொயட்டு தனுஷ்! ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான இந்த பாடல் காதலில் ஒன் சைடு காதலர்களுக்குக் கிடைத்த ஒரு பெரிய பரிசு. அதனால் தான் இது பத்தாம் இடத்தில் உள்ளது!

[embedded content]

9. தும்பி துள்ளல்லோ:

நடிகர் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில், காதலர்கள் தங்களது காதல் திருமணத்தில் முடியும் அழகை காட்டும் ஒரு அழகான பாடல் தான் தும்பி துள்ளல். இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஷ்ரேயா கோஷல் குறலில் உருவாகியுள்ள இந்த பாடல் என்றும் காதுகளுக்கு இனிமையாகவே இருக்கும்.

[embedded content]

8. மெகபூபா:

2022ம் ஆண்டு உலகளவில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் தான் ‘கே.ஜி.எஃப்’- பாகம் 2. யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த இந்த படத்தின் மெகபூபா பாடல், காதலர்களுக்காகவே இர்யக்கிய் அபாடல் என்று சொல்லலாம். ரவி பஸ்ரூர் இசையமைத்த இந்த பாடல், காதலர் தினத்தில் காதலை வெளிப்படுத்தும் ஒரு அழகான பாடல் என்றே சொல்லலாம்.

[embedded content]

7. முதல் நீ முடிவும் நீ:

2022ம் ஆண்டு வெளியான இணையதள படம் தான் முதல் நீ முடிவும் நீ. தர்புகா சிவா இயக்கி இசையமைத்த இந்த பாடல் தாமரை வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் தர்புகா சிவா பாடிய இந்த பாடல், அனைவரது சோசியல் ஊடகம்க்களிலும் ஸ்டேடசாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

[embedded content]

6. நான் பிழை:

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிய நகைச்சுவை காதல் லீலை படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் அனைவரது மனதையும் கவர்ந்த ஒரு சூப்பர் ஹிட் பாடல் தான் இந்த நான் பிழை. ஒரு குழந்தை தனமான உன்னதமான காதலை வெளிப்படுத்தும் பாடலான இது உங்கள் காதலருக்கு உகந்த ஒரு பரிசு…

[embedded content]

5. மல்லீப்பூ:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் வந்த ‘மல்லிப்பூ’ என்ற பாடல், வெகு தூரம் இருக்கும் உங்கள் காதலுக்கு விடும் தூது போன்றது. 

உங்களது காதலை எவ்வளவு மிஸ் செய்கிறீர்கள் என இந்த பாடல் மூலம் வெளிப்படுத்தி காதலர் தினத்தைக் கொண்டாடுங்கள்.

[embedded content]

4. கண்ணுக்குள்ளே:

ஹனு ராகவபுடி இயக்கத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அழகான ஒரு காதலை வெளிப்படுத்தும் படமாக வெளியாகி அனைவரது அன்பையும் பெற்ற படம் தான் சீதா ராமம். துல்கர் சல்மான், மிருனால் டாகூர், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் வரும் அனைத்து காதல் பாடல்களுமே மிகவும் அழகாக தான் இருக்கும். ஆனால், அந்த பாடல்களில் மிகவும் அதீத கவனம் ஈர்த்த பாடல், ‘கண்ணுக்குள்ளே கரைந்த’ என்ற பாடல் தான். ஒவ்வொரு வரிகளும் அந்த பெண்ணை எவ்வளவு தெய்வீகமாக காதலிக்கிறேன் என ஆண் தெரிவிப்பது போல இருக்கும் இந்த பாடல், காதலர்களுக்கு மிகவும் அழகான பரிசு.

[embedded content]

3. மேகம் கருக்காதா:

அனிருத் இசையமைத்து தனுஷ் வரிகளில் உருவாகிய இந்த பாடல், தனது காதல் குறித்து கூறும் அழகான பாடலாக இருக்கிறது. இந்த பாடலில், தனுஷ், ராஷி கண்ணா மற்றும் நித்யா மேனன் இருக்கும் இந்த பாடலை காதலருக்கு டெடிகேட் செய்து மகிழலாம்.

[embedded content]

2. காலத்துக்கும் நீ வேணும்:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான இந்த பாடல், ஒரு காதலை எந்த அளவிற்கு போற்றுகின்றனர் என தெரிவிக்கிறது. அழகான இந்த பாடல், சிலம்பரசன் குரலில் கேட்கும் போது மிகவும் இதமாக இருக்கும்.

[embedded content]

1. அகநக அகநக முறுநகையே…:

மணிரத்னம் இயக்கத்தில், பிரபல கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படமாக்கப்பட்டதில், குந்தவை மற்றும் வல்லவராயன் வந்தியத்தேவனுக்கும் இடையிலான காதலை வெளிப்படுத்தும் ஒரு இதமான பாடல் தான் இது. எதுகையால் உருவாக்கப்பட்ட இந்த பாடல், குறுகிய நேரம் மட்டுமே இருந்தாலும், மிகவும் அழகான ஒரு பாடலாக இருக்கிறது.

[embedded content]

கூடுதலான:

இந்த பத்து பாடல்கள் மட்டுமின்றி கூடுதலாக ஒரு பாடலும் இருக்கிறது. அது தான் என்றும் மாறாத, “அம்பிகாபதி” படத்தின் டைட்டிள் பாடலான ‘அம்பிகாபதி’ பாடல் தான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், நரேஷ் ஐயர் குரலில் உருவாகிய இந்த பாடல் வெளியாகி, பல ஆண்டுகள் ஆன பிறகும், இன்றும் இந்த பாடல் சோசியல் ஊடகம்க்களில் படு மிகுதியாக பகிரப்பட்டுியும் போக்காகவும் இருக்கிறது.

இந்த பாடல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களது காதலர் தினத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தி சிறப்பாக கொண்டாடுங்கள்.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | இந்த வேலண்டைன்ஸ் டே-க்கு கூகுள் விட்ட டூடுள் என்ன?

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »