Press "Enter" to skip to content

500க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்ற விசேஷ பூஜை…

தென்காசி | கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வரும் சூழலில், இந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்களின் தேவைக்காக அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில், நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் சூழலில், மருத்துவமனை வளாகம் சுற்றுச்சூழல் மாசு நிறைந்து காணப்படுவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

மேலும் படிக்க | தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை…

இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஏற்றப்படும் குளுக்கோஸ் மற்றும் ஊசி போன்ற உபயோகப்படுத்தப்பட்ட மருந்து பொருட்களை மருத்துவ ஊழியர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே மருத்துவமனை வளாகத்திலும், மருத்துவமனை வார்டு பகுதியில் ஓரமாகவும் வீசி சென்று வருவதால் ஆங்காங்கே குப்பை படலமாக மருத்துவ கழிவுகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ளே தேங்கி கிடந்து வருகின்றன. 

மேலும் படிக்க | மின்கலவடுக்கு (பேட்டரி) தொழிற்சாலை அருகே நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு கிடங்கில் பயங்கர தீ…

இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாய சூழல் நிலவி வருவதாகவும், இது தொடர்பாக மருத்துவ உயரதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சமூக வலைதளங்களில் ஒரு காணொளி தற்போது மிகுதியாக பகிரப்பட்டுி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து சென்னை மாநகராட்சி அதிரடி!

Source: Malai Malar