Press "Enter" to skip to content

இந்தியாவிலேயே முதல் அமைதியான தொடர் வண்டிநிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல்… காரணம் என்ன?!!

நித்தியானந்தா என்றாலே எப்போதும் பல பிரச்சனைகள் தான். அதிலும், அவர் மீதான வழக்குகள் புகார்கள் தாண்டி அவர் தற்போது பல நாடுகளில் முக்கிய கிரிமிணலாக கருதப்பட்டு தேடப்பட்டும் வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது உலக நாடுகள் இணைந்து வைக்கும் கூட்டத்தில், கைலாசாவில் இருந்து கலந்து கொண்ட பிரதிநிதி, நித்தியானந்தா தான் இந்து மதத்தின் மிகப்பெரிய மத குரு எனவும், அவரைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், பல வகையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க | ஏன் அக்னிபாத்… வெளியில் வரும்போது 11 லட்சமா… மத்திய அரசு கூறுவதென்ன?!!

2019ம் ஆண்டு, குஜராத்தில் இருந்து பாலியல் வழக்கில் இருந்து தப்பி ஓடிய தன்னைத் தானே மதகுருவாக பிரகடனம் செய்து கொண்டார் நித்தி. ஒளிந்து, பதுங்கி இருக்கும் நித்தி, தன்னை ஒரு மதகுருவாக காட்டிக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், தற்போது தன்னையே ஒரு கடவுளாகவே ஆகிக் கொண்டார்.

மேலும், அடையாளம் அற்ற ஒரு தீவில் இருக்கும் இவர், தானே ஒரு ‘கைலாசா’ என்ற நாட்டைக் கண்டுபிடித்ததாகவும், அதற்குத் தானே போப் ஆண்டவர் போல தலைவராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது சிஷ்யர்களுக்கு குடியுரிமையும், பாஸ்போர்ட்டுகளும் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நேரத்தை மிச்சப்படுத்தி பிரியாணி வாங்குவது எப்படி?

கைலாசா என குறிப்பிடாமல், யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா எனக் குறிப்பிடப்படும் நிலையில், தனது நாட்டின் பிரஜை வைத்து, UN அசெம்ப்ளியில் கலந்து கொண்டுள்ளார் நித்தி. அந்த சந்திப்பில், இந்து மதத்தின் மிகப்பெரும் மதகுருவாக நித்தியைக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

பிப்ரவரி 22 அன்று, மா விஜயப்ரியா நித்யானந்தா என்ற பெண்மணி, 19வது ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் (CESR) கூட்டத்தில், ‘அமெரிக்கா கைலாச’வை ‘பிரதிநிதித்துவப்படுத்தினார்’. ஐக்கிய நாடுகள் சபையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், விஜயப்ரியா ‘கைலாசத்தின் நிரந்தர தூதர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 10 வயது மகனை வீட்டிலேயே 3 வருடங்கள் பூட்டி வைத்த தாய்…

நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) பற்றி விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் பேசிய விஜயப்ரியா, SDG களுக்கும் இந்து மதத்திற்கும் இடையே ஒரு தெளிவற்ற தொடர்பை ஏற்படுத்தினார், பின்னர் தனது ‘தேசத்தை’ நிறுவிய நித்தியானந்தா, அவர் பிறந்த நாடான இந்தியாவால் ‘துன்புறுத்தப்படுகிறார்’ என்று கூறினார்.

இந்து மதத்தின் வாழும் உச்சத் துறவியாக நித்தியைக் குறிப்பிட்ட விஜயப்ரியா, தங்கள் கடவுளான நித்தியானந்த பரமசிவத்தையும் கைலாசா நாட்டையும் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், நித்யானந்தா மற்றும் கைலாசத்தில் உள்ள இரண்டு மில்லியன் இந்து புலம்பெயர்ந்த மக்களை துன்புறுத்துவதைத் தடுக்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் “ஐ.நா. மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள்” நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | மட்டன் பிரியாணியில் பூனைக்கறியா…? பிரியாணிப் பிரியர்களே உஷார்…!

தொடர்ந்து பேசிய அவர், “இந்து மதத்தின் கொள்கைகள், தீர்வுகள் மற்றும் கொள்கைகளை” சர்வதேச தளங்களில் கேட்க அனுமதிக்குமாறு மாநாட்டில் உள்ள தலைவர்களை அவர் வலியுறுத்தினார். கைலாசா 150 நாடுகளில் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிறுவியதாக அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

தொடர்ந்து எப்போது சர்ச்சையிலேயே சிக்கி இருக்கும் நித்தி எப்போது தான் திருந்த போகிறாரோ என பலரும் தங்களது கருத்துகளை சோசியல் ஊடகம் இல் பதிவிட்டு ம், நித்தியை கேலி செய்தும் வருகின்றனர்.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகை….பதவி இழக்கிறாரா செல்வ பெருந்தகை?

 

The United States of America signs bilateral agreement with United States  of KAILASA

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »