Press "Enter" to skip to content

கண்ணில் மிளகாய் பொடி தூவி கள்ளக்காதலனுடன் கணவனை கொலை செய்த மனைவி…

காதல் திருமணம் செய்த பிறகும், வேறொரு நபருடன் ஏற்பட்ட தொடர்பால் கள்ளக்காதலன் உதவியோடு கணவனைக் கொன்ற மனைவி கைதாகியுள்ளார்.

கிருஷ்ணகிரி | போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகேயுள்ள என்.தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த கந்தன், கமக்கலாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பெற்றோர் இண்ட்ஹ திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

மேலும் படிக்க | பாஜக அல்லாத ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வார்கள்…. அப்படி இல்லை என்றால்…!!!

டிரைவராக வேலை செய்து வரும் கந்தனுக்கும், மனைவி சந்தியாவுக்கும் சந்திஷ், மேலாய்வுஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். அடிக்கடி கணவர் வண்டி ஓட்ட வீட்டை விட்டு செல்லும் நிலையில், கணவனுக்காகவும், அவரது அன்பிற்கும் சந்தியா ஏங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது வீட்டிற்கு பால் பாக்கெட் போடும் அதெ கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சிவசக்தி என்ற இளைஞருடன் சந்தியாவுக்கு நட்பு ஏற்பட்டு பின்பு அது தொடர்பாக மாறியுள்ளது.

தனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆனதையும், தனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதையும் மறந்து காதல் திருமணம் செய்த கணவரை விட்டு விட்டு அவ்வப்போது சிவசக்தியுடன் தனிக்குடுத்தனம் நடத்தி வந்ததாக தகவ்ல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணக்கான பொது மக்களை ஏமாற்றிய கும்பல்….

நாளடைவில் கந்தனுக்கு சந்தியாவின் செயல் தெரியவந்தது. சந்தியாவும் சிவசக்தியும் வாட்சாப்பில் கால்களும், காணொளி கால்களும் பேசியதை சாட்சியாகக் காட்டி சந்தியாவைக் கண்டித்த போது, கோபடைந்த சந்தியா கந்தனுடன் சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் இடையில் சண்டை அடிக்கடி நடந்த நிலையில், ஒரு நாள் கந்தன் வண்டி ஓட்ட வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.

கணவர் கிளம்பிவிட்டார் என சிவசக்திக்கு போன் செய்து அவரை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார் சந்தியா. ஆனால், வண்டி ஓட்டாமல் கந்தன் 10 மணிக்கே வீட்டிற்கு திரும்பிய நிலையில், தனது வீட்டிலேயே சிவசக்தியைக் கண்டு கோபமடைந்த கந்தன், இருவரையும் கத்தி வெளியே அனுப்ப வரும் போது, சமையலறையில் இருந்த மிளகாய் பொடியை கந்தன் கண்ணில் தூவி அவரை சந்தியாவும் சிவசக்தியும் தாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க | ப்ளாஸ்டிக் பேரலில் மீட்கப்பட்ட பெண் சடலம்… தொடர் வண்டிநிலையத்தில் பரபரப்பு…

பின், கந்தன் வாயைப் பொத்தி, காய்கறி வெட்டும் கத்தியை வைத்து கந்தனின் கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிகளில் தொடர்ந்து பல முறை குத்தி தாக்கியுள்ளனர். இதனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த கந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரத்தத்தை கழுவி சுத்தப்படுத்திய பின், கந்தனின் நண்பர் வசந்த் என்பவரை உதவிக்காக அழைத்துள்ளார்.

கந்தன் கழிவறையில் வழுக்கி விழுந்ததாக சொன்ன தால், அதனை நம்பி, கந்தனை மீட்டு கவேரிப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் கந்தன் இறந்து விட்டதாக அறிவித்த நிலையில், சந்தியா மீது சந்தேகம் கொண்ட வசந்த், சந்தியா மற்றும் சிவசக்தியின் மொபைல்களை பறித்து போலீசிடம் புகாரளித்துள்ளார்.

மேலும் படிக்க | ஆளுநர் கணினிமய ரம்மிக்கு கையெழுத்து போடுவதுதான் சட்ட விதி!!!!

இதனையடுத்து, நாகரசம்பட்டி காவல் துறையினர் கந்தனின் மனைவி சந்தியா, அவரது காதலன் சிவசக்தி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கனவனை கள்ளக்காதலன் சிவசக்தி உதவியுடன் கொலை செய்தது தெரியவந்தது பின்னர் இருவரையும் கைது செய்த நாகரசம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கந்தனின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கணவனாக கரம் பிடித்த நிலையில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை தீர்த்து கட்டிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | மாடியில் இருந்து விழுந்த ஏர் ஹோஸ்டெஸ்… கைதான காதலன்…

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »