Press "Enter" to skip to content

அதிமுகவில் 6 புத்தகங்கள் திமுக ஆட்சியில் 120 புத்தகங்கள் – முதலமைச்சர் புகழாரம்

திமுகவின் கொள்கை பரப்பு  செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ லியோனியின் வளர்ந்த கதை சொல்லவா நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட அதன் முதல் பிரதியை திமுக பொருளாளர் டி ஆர் பாலு பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, ஆ ராசா,ஆர் எஸ் பாரதி, டி.கே.இளங்கோவன், மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

புத்தகத்தை வெளியிட்டு விழா மேடையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….

டி ஆர் பாலு வாழ்த்துரை வழங்கும்போது திண்டுக்கல் லியோனியை அண்ணன் என்று அழைத்தார்கள், உடனடியாக நான் லியோனியிடம்  கேட்டேன் உங்கள் வயது என்ன என்று 65 என்று சொன்னார் என்று பேசிய அவர் 66 வயதை 27ஆம் தேதி காண இருக்கிற அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், எனக்கு வயது 70, டி ஆர் பாலுக்கு 80-ஐ தாண்டி இருக்கும் என்று கூறிய அவர் தான் வாழ்ந்த கதையை வளர்ந்த கதையை திண்டுக்கல் லியோனி  எழுத்தாக சொல்லத் தொடங்கி இருக்கிறார் என்றும் அவர் பேச்சை மாதிரி எழுத்தும் அவருக்கு கை வந்துள்ளது, எல்லோருக்கும் எழுத்தும் பேச்சும் இப்படி கை வராது, அவர் பேச்சு சுவையானது என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர் திண்டுக்கல் ஐ லியோனி டைமிங் ஜோக்ஸ் அடிப்பார் அது பட்டிமன்றமாக இருந்தாலும் சரி பாட்டுமன்றமாக இருந்தாலும் சரி வாத மன்றமாக இருந்தாலும் சரி பொதுக்கூட்டமாக இருந்தாலும் சரி தொலைக்காட்சி விவாதங்களாக இருந்தாலும் சரி தன்னுடைய நகைச்சுவை பேச்சியால் பார்வையாளர்களை மட்டும் இல்லாமல் வந்திருக்கக் கூடியவர்களையும் தன் வசப்படுத்த கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிற காரணத்தால் தான் நாவரசன் கூட அவரை சொல்லலாம் என்று புகழ்ந்து பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் தமிழ்நாடே திண்டுக்கல் லியோனி பேச்சியை கேட்டு மயங்கின அப்போ நான் மட்டும் என்ன விதிவிலக்கா என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | தமிழக டிஜிபியிடம் கொடுத்த நோட்டீசை திரும்ப பெற்றுள்ளது தேசிய மகளிர் ஆணையம் – காரணம் என்ன?

தொடர்ந்து பேசிய அவர் இப்போது எப்படி நான் தூங்காமல் இருக்கிறேனோ   இரவிலும் அப்போது நான் தூங்க மாட்டேன் என்றும் நான் தூங்காமல் இருப்பது எனக்கு பழகி விட்டது என்று கூறிய அவர் அப்போது நான் இரவில் தேர் ஒட்டி செல்லும் போது திண்டுக்கல் ஐ லியோனி பேச்சை தான் கேட்டு செல்வேன் அப்படி கேட்டு கேட்டு அவருடைய பேனாகவே நான் ஆகிவிட்டேன் என்றும் எப்போதும்  பேன்ட் அணிந்திருப்பவரை நான் தான் வேஷ்டி போட வைத்தேன் என்று பழைய கதைகளை பேசிய முதல்வர் பட்டிமன்றங்கள் மூலம் மூடநம்பிக்கையை கேள்வி கேட்டார் லியோனி என்றும் என் எஸ் கே மாதிரி பாட்டு பாடி பட்டிமன்றங்களை நடத்துவார் எனக் கூறிய அவர் எந்த தலைப்பிலும் பேசினாலும் சிரிக்க வைப்பவர் திண்டுக்கல் ஐ.லியோனி சிரிக்க வைப்பது மட்டுமில்லாமல் சிந்திக்க வைப்பவரும் கூட என்றும் கூறினார்.

மேலும் படிக்க | ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் தொடர் வண்டிமறியல்

அதிமுக ஆட்சியில் ஓராண்டு காலத்தில் 6 புத்தகம் தான் வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் 120 புத்தகங்கள் வெளியாகி இருக்கிறது அதற்கு முழு காரணம் லியோனியின்  முயற்சி தான் என்று கூறிய அவர் இன்னும் 150 புத்தகங்கள் தயாராகி வருகிறது திசை தோறும் திராவிடம், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், கலைக்களஞ்சியம் சிறுவர் களஞ்சியும் என எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பாடநூல் கழக புத்தகம் செல்வதாகவும் புத்தகத் திருவிழாக்களில் பாடநூல் கழகப் புத்தகங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்றும்  தமிழகத்தில் புத்தகப் புரட்சி நடக்க லியோனியும் ஒரு காரணம் என்று பேசிய அவர் அவர் இருக்கிற பொறுப்பு தகுதியானவருக்கு தான் சென்று சேர்ந்திருக்கிறது என்றும் பேசினார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »