Press "Enter" to skip to content

11 லட்சம் 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்…!!!

கிருஷ்ணகிரி | இன்றிய காலத்தில் நமது கைகளில் விரல்கள் இருக்கின்றனவோ இல்லையோ, ஆனால், கைபேசி நிச்சயமாக இருக்கிறது. அதிலும், ஒரு சிலர் இரண்டு சிம் அட்டைகளும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்த கைபேசிகளுக்கு சேவை தரும் செஃபோன் டவர்களில்லை என்றால், அவ்வளவு தான். மரத்தின் மீது ஏறி நின்றாலும் சரி, குன்றின் மீது ஏறி நின்றாலும் சரி, சிக்னலே கிடைக்காது.

இந்த அவசர உலகத்தில், டவர் இல்லாத ஒரு ஊருக்கு சென்றால், நம்மால் எப்படி கைபேசி பயன்படுத்த முடியும்? அப்படி ஒரு கிராம் இன்றும் இருக்கிறது என்றும், அங்கு பல ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் என்றும் கூறினால், உங்களால் நம்ப முடியுமா? நம்ப முடியவில்லை என்றாலும் அது தான் உண்மையாக இருக்கிறது.

மேலும் படிக்க | “வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடைக்காது” – மின்வாரியம் எச்சரிக்கை…

சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட காளிங்காவரம் ஊராட்சி, ஒசூரிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலும் கிருஷ்ணகிரியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊராட்சியில் மட்டம்பள்ளி, அக்ரகாரம், காளிங்காவரம், கொடித்திம்மனப்பள்ளி, ஜவுக்குபள்ளம், தின்னூர், குருமூர்த்தி கொட்டாய் என 7 குக்கிராமங்கள் அமைந்துள்ளன.

2500 வீடுகளுக்கும் அதிகமாக உள்ள இந்த ஊராட்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய 1000 – கும் அதிகமான மாணவ மாணவிகள் உள்ளனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் ஒரு கைபேசி டவர் கூட இல்லாமல் இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | அடைமழை (கனமழை)யால் அடியோடு சாய்ந்த வாழை மரங்கள்…

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகளின்றி
காளிங்காவரம் ஊராட்சியில் BSNL உள்ளிட்ட எந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் டவர்களும் இல்லாததால் மாணவ மாணவிகள் கணினிமய வகுப்புகளில் பங்கேற்க கைகளிலில் கைபேசி, புத்தகங்களுடன் உயர்ந்த மலைபகுதிக்கும் அங்கு ஆபத்தான முறையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் டவரை தேடி அலைந்து பங்கேற்று கல்வி பயின்றுள்ளனர்.

காளிங்காவரம் ஊராட்சியில் துவக்கப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, துணை சுகாதார நிலையம், தமிழ்நாடு கிராம வங்கி, தபால்நிலையம், மக்கள் சேவை மையம் என அரசின் அனைத்து அலுவலகங்கள் இருந்தாலும் தொலைதொடர்பு நெட்வொர்க் இல்லாததால் இணைய வசதியின்றி பயணில்லாதவாறே காட்சியளிக்கின்றன.

மேலும் படிக்க | உணவக கழிவு நீரால் விவசாய நிலம் பாதிப்பு… விவசாயிகள் புகார்…

இதுக்குறித்து பேசிய காளிங்காவரம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரீஷ், 15 ஆண்டுகளாக டவர் அமைக்க வலியுறுத்தி வருவதாகவும், கர்ப்பிணி பெண்கள், விபத்திற்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 உதவூர்திகளை தொடர்புக்கொள்ள குறிப்பிட்ட பகுதிக்கு டவரை தேடி ஓடுவதாகவும், தகவலை தெரிவிப்பதற்குள் பல உயிரிழப்புக்களை சந்தித்திருப்பதாக கூறுகிறார்.

 

மேலும், இணைய வசதி இல்லாததால் தொழில் முணைவோர், வியாபாரிகள் தொழில் மேற்க்கொள்ள முடியாமல் ஒரு ஊராட்சியில் உள்ள 7 கிராமங்கள் வளர்ச்சியில் பின்னோக்கி சென்றுவிட்டதாக கூறுகிறார்.

மேலும் படிக்க | ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்…

இதுக்குறித்து அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை சந்தித்து மனு அளித்ததால் BSNL 4G கைபேசி டவர் அமைக்க மாவட்ட ஆட்சியர் தரப்பில் உத்தரவு கடிதம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஊராட்சி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் நாளைய எதிர்காலமான இளைஞர்களின் நலனிற்காகவும், மாணவர்களின் நலனை கருத்திக்கொண்டு விரைவில் கைபேசி டவரை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | வனத்துறையினரின் அலட்சியத்துக்கு பலியாகும் நூற்றுக்கணக்கான ஆமைக்குஞ்சுகள்…

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »