Press "Enter" to skip to content

ஆய்வை தொடங்கியது ,. ஆதித்யா L1 விண்கலம் ..!

இந்திய சாலைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஜீப் காம்பஸ் 4×2 எஸ்யுவியை, சந்தையில் அறிமுகபடுத்தியுள்ளது ஜீப் நிறுவனம்.

அமெரிக்க தேர் உற்பத்தி நிறுவனமான ஜீப், இந்தியாவில் பெரியளவில் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளது. 

அந்த காலத்து ஆண்கள் முதல் இந்த காலத்து இளைஞர்கள் வரை பெரும்பாலும் ஜீப் காரையே விரும்புகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் பல நிறுவனங்களும் அவர்களது எஸ்யுவி ரக கார்களை, சந்தையில் களம் இறங்கினாலும், ஜீப் தனி இடத்தை பிடித்துள்ளது.

அந்த வகையில், ஜீப் நிறுவனம் தனது படைப்புகளான ஜீப் காம்பஸ், ஜீப் வ்ராங்களர், ஜீப் மெரிடியன் மற்றும் ஜீப் க்ராண்ட் செரோக்கீ போன்ற கார்கள் மூலம் இந்திய சந்தையில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், ஜீப் நிறுவனம் தனது புதிய ஜீப் காம்பஸ் 4×2 AT எஸ்யுவி தேரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே சந்தையில் இருக்கும் கார்களின் 4×4 வரிசையில், இந்த புதிய காம்பஸ் 4×2 ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை, ப்ளாக் ஷார்க் (Black Shark) எடிசன் என அழைக்கிறார்கள். இந்த புதிய காம்பஸ், இந்திய சாலைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன் பகுதி க்ரில் மற்றும் அலாய் வீல்கள் மறு வடிவமைப்பு பெற்றுள்ளது. 

புதிய காம்பஸ் எஸ்யூவியின் ஓட்டுவிசை 170HP மற்றும் 350nm ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய கார்களை போலவே, 9 ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் வருகிறது. இந்த தேர் 16.2 kmpl மைலேஜ் தரும் என்று ஜீப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிக சக்தி கொண்ட ஒரு எஸ்யுவி கார், அதிக மைலேஜ் தருவது வெகுவாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த புதிய ஜீப் காம்பஸ் 4×2 வின் ஆரம்ப விலை 20.40 L எனவும் ஆட்டோமேட்டிக் ரகத்தின் விலை 23.99L எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க || சோம்பேறி குடிமகனுக்கு ரூ 88,000 பரிசா… போட்டிக்கு நாங்க வரலாமா??

Source: Malai Malar